ETV Bharat / bharat

கரோனா நிவாரண நிதி வழங்காத மத்திய அரசு - புதுச்சேரியில் நாளை போராட்டம்

புதுச்சேரி: பேரிடர் நிவாரண நிதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

all party
all party
author img

By

Published : Apr 23, 2020, 3:10 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் கூட்டத்தில், கரோனா பேரிடர் நிவாரண நிதியை புதுச்சேரிக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கைக் கண்டித்து நாளை 24 ஆம் தேதி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், சரக்கு மற்றும் சேவை வரியின் ஏழு மாத நிலுவையையும், ஏழாவது ஊதியக் குழுவின் அமலாக்க நிதி உதவியையும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கரோனா நிவாரண நிதி வழங்காத மத்திய அரசு - புதுச்சேரியில் நாளை போராட்டம்

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை செய்துகொண்ட முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.