ராஜஸ்தான் மாநிலம் நாகூர் காரனு என்ற கிரமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பணம் திருடியதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் கொடூரமாக தாக்கினர்.
இது குறித்து வியாழக்கிழமை ட்வீட் செய்த ராகுல் காந்தி, இந்த விஷயத்தில் தலித் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அரசை வலியுறுத்தினார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மதன் தில்வார், "முதலமைச்சராக தொடர அசோக் கெலாட்டுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. அவரது ஆட்சிக் காலத்தில் பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன" என்றார்.
மேலும், இந்த வழக்கில் காவல் துறையினர் நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் 78 வயது மாணவர்!