ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி அங்கு பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். ஹிசார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தேச பாதுகாப்பு குறித்து நான் முடிவுகள் எடுக்க வேண்டுமா, வேண்டாமா? அரசியலுக்கு மேலானது தேச பாதுகாப்பு அல்லவா.
ஆனால், ஹரியானா மக்களின் உணர்வையும், ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தையும் காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்து அக்கட்சி வலியில் உள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்கினோம். அம்மாநிலத்தின் வளரச்சிக்கு தடையாக இருந்ததை நீக்கினோம். மருந்துகளை அளித்தாலும் காங்கிரஸ் கட்சியின் வலி நீங்காது. தூய்மை இந்தியா, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்றவற்றை பற்றி பேசினால் அதன் வலி அதிகரிக்கும்" என்றார்.