நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் அறிக்கை, பரப்புரை என மும்முரமாகியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ராஜஸ்தான் சடுல்பூர் தொகுதியின் சட்டப்பேரவைஉறுப்பினரான கிருஷ்ணாபூனியா பெயரும் இடம்பெற்றது. அவர் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
வட்டு எறிதல் வீராங்கனையான கிருஷ்ணாபூனியா, மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். இவர் 2010இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.