ETV Bharat / bharat

'டிவி விவாதமே ராஜீவ் தியாகியின் உயிரைக் குடித்தது' - காங்கிரஸ் குற்றச்சாட்டு - தொலைக்காட்சி விவாதம் குறித்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

டெல்லி: காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் தியாகி உயிரிழந்ததற்கு நச்சு போல பரவும் தொலைக்காட்சி விவாதமே காரணம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Randeep Singh Surjewala
Randeep Singh Surjewala
author img

By

Published : Aug 13, 2020, 9:55 AM IST

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் தியாகி நேற்று மாலை ஐந்து மணிக்கு தனியார் தொலைகாட்சி சார்பில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் அருகில் இருந்தவர்களின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ராஜீவ் தியாகியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனையில் ராஜீவ் தியாகி உயிரிழந்தார்.

ராஜீவ் தியாகி உயிரிழந்தற்கு நச்சு போல பரவும் தொலைக்காட்சி விவாதங்களே காரணம் என்று காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

இது குறித்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "நச்சு விவாதங்களும், விஷம்போல் உள்ள செய்தித்தொடர்பாளர்களும் எளிய மக்களை கொல்ல தொடங்கிவிட்டனர்.

டிஆர்பி-களை உயர்த்திக் கொள்ள தொலைக்காட்சிகள் எவ்வளவு காலம்தான் இதுபோன்ற விவாதங்களை நடத்துவார்கள்? நாட்டின் ஆன்மாவை விஷமாக்கும் வகையில் வகுப்புவாத கருத்துகளை இன்னும் எத்தனை காலம்தான் மக்கள் மத்தியில் பரப்புவார்கள்" என்று ஹிந்தியில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

  • कब तक ज़हरीली डिबेट और विषैले प्रवक्ता संयम और सादगी की ज़बान की जान लेते रहेंगे?

    कब तक इस बहस से टीआरपी का धंधा चलेगा?

    कब तक हिंदू-मुसलमान के विभाजन का ज़हर इस देश की आत्मा को लीलता रहेगा?

    कब तक?#rajiv_tyagi https://t.co/pqhIMmNTwJ

    — Randeep Singh Surjewala (@rssurjewala) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நேற்று மாலை உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் தியாகிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் ஒரு சிங்கத்தை இழந்துவிட்டது. கட்சி மீது அவர் காட்டிய அன்பை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய ரயில்வே வரலாறு காணாத சரிவு - 167 ஆண்டுகளில் இதுவே முதல்முறை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.