பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனமான இதன் 52.98 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், லாபம் ஈட்டும் நிறுவனத்தை ஏன் விற்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "2051.53 கோடி ரூபாய் லாபத்தை மத்திய அரசுக்கு பிபிசிஎல் ஈட்டித் தந்துள்ளது. இருந்தபோதிலும், 53 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதலாளித்துவ நண்பர்களுக்கான தேர்தல் வாக்குறுதியா இது?" என்றார்.
இதையும் படிங்க: போலி நிறுவனங்கள் மூலம் ரூ.2,000 முதலீடு - அதிர வைக்கும் யெஸ் பேங்க் மோசடி