கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. குறிப்பாக, சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நேற்று (மார்ச் 17) ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 11,500 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,000ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் 475 பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7,426ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், புதிதாக எட்டு நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது.
பேரழிவை உண்டாக்கும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடிவருவதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கு கரோனா பரவுமா?