ETV Bharat / bharat

கரோனா மற்ற நோய்களுடன் இணைந்தால் ஆபத்தா... மருத்துவர் பதில்!

author img

By

Published : Sep 3, 2020, 9:59 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு ஏற்கனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்கும் சமயத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

oe
orcoe

கொமொர்பிடிட்டி என்பது ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருப்பதை குறிக்கிறது.

இவர்களுக்கு இத்தகயை நோய் பாதிப்புகள் நீண்ட காலங்களாக இருக்கும். குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, சிறுநீரகம், கல்லீரல் அல்லது இதய நோய் பிரச்னை உள்ளபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என ஹைதராபாத்தின் வின்என் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ராஜேஷ் வுக்கலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " கடந்த எட்டு மாதங்களாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. யார் பாதிக்கப்படுவார்கள் என்பதில் அதிகளவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இச்சமயத்தில் தான் கொமொர்பிடிட்டி’ என்ற வார்த்தையும் அதிகளவில் பகிரப்பட்டது. வயது பொறுத்து தான் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.

எனவே தான், கரோனா நோய் பாதிப்பில் வயதுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் அவர் கூறுகையில், " கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயை கட்டுபடுத்த சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு கரோனா அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதே போல், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உடலில் உள்ள இரத்த ஓட்டத்துடன் தொடர்புடையது. இரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டால், உடலின் செயல்பாடு மாறுபடுகிறது.

இதயம், கல்லீரல் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இது மற்றொரு ஆபத்துக்கு வழிவகுக்கிறது.

இந்த இரண்டு பாதிப்பு உள்ளவர்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளனர். எனவே, நோய் தொற்றின் வீரியம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கரோனா தொற்றை விரட்ட நிச்சயம் தடுப்பூசி மருந்து அமலுக்கு வரவேண்டும். இல்லாவிட்டல் கரோனாவை தொற்றகடிக்க இயலாது.

ஆனால், சர்க்கரை அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலின் சமநிலையின் இயல்பைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.

அதன்படி, ஒருவர் நன்றாக தூங்க வேண்டும் அப்போது தான் மூளை மற்றும் உடல் இரண்டிற்கும் போதுமான அளவு ஓய்வு கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தலாம்.

பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதும் சிறந்த தீர்வு தான். எனவே, கொமொர்பிடிட்டி பாதிப்பு உள்ளபவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.