ETV Bharat / bharat

அமெரிக்க குழு டெல்லி கலவரத்தை அரசியலாக்குகிறது - வெளியுறவுத்துறை

author img

By

Published : Feb 27, 2020, 3:30 PM IST

டெல்லி: மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் ஆணையம் டெல்லி கலவரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட விழைகிறது என வெளியுறவுத்துறை செயலர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Raveesh
Raveesh

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் காவலர், உளவுத்துறை அலுவலர் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சுமார் 106 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வன்முறையை அரசும் காவல்துறையும் முறையாக கையாளவில்லை என பலரும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் உலக அரங்கிலும் இது தொடர்பான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சான்டர்ஸ் டெல்லி கலவரம் குறித்து தனது கவலையை தெரிவித்தார். மேலும், மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் ஆணையம் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரவீஷ் குமார், டெல்லி கலவரத்தை வைத்து ஒரு சில ஊடகங்களும், ஒரு சிலரும் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். தங்களது ஆதாயத்துக்காக டெல்லி வன்முறையை அரசியலாக்கி வருகின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தை அரசு கூர்ந்து நோக்கி துரித நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும், இதுபோன்ற தருணத்தில் பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவது சரியல்ல எனவும் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெப் சீரிஸில் களமிறங்கும் ஆமிர்கான்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.