குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதுமட்டுமின்றி கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். மேலும் இதற்கு எதிராக கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ஒற்றுமையை சீர்குலைக்க ஆங்கிலேய ஆட்சியில் கையாளப்பட்ட வகுப்புவாதக் கூறுகளை இந்த அரசு (பாஜக அரசு) நேரடியாகச் செய்துவருகிறது.
மேலும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் காலனியாதிக்ககத்திற்கு எதிரானது என்றாலும், தற்போதைய இயக்கம் காலனியாதிக்கத்திற்குத் துணையாக நின்றவர்களுக்கு எதிரானது” என்று கூறினார்.
இதையும் படிங்க...நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு