ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: சரிவை சந்தித்துள்ள பொருளாதாரம் - 10 லட்சம் கோடி ரூபாய் தேவை

இந்தியாவில் நிகழ்ந்துள்ள சரிவை மீட்க 10 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மூன்று வார ஊரடங்கால் 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி தேவைப்படுகிறது.

Economy
Economy
author img

By

Published : Apr 14, 2020, 11:33 AM IST

காட்டன் துணியில் தீ பிடித்து கொண்டால் எந்தளவுக்கு அழிவு ஏற்படுமோ அதே அளவுக்கு கரோனா வைரஸ் நோயால் மனித இனத்தின் வாழ்க்கை, வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் பொருளாதாரம் சரிவை சந்தித்துவருவது நம்மை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வதேச நிதியம் கணித்ததற்கு நேரெதிராக தனிநபரின் வருமானம் 170 நாடுகளில் குறைந்தது. உலகளவில் 81 விழுக்காட்டினரின் வாழ்வாதாரத்திற்கு மூலமாக உள்ள தொழிற்சாலைகள் பாதியாக அல்லது முழுவதுமாக மூடப்பட்டுள்ளது என ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்தால் சூழ்நிலை மேலும் மோசமாகும் என சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கரோனாவால் உருவாகியுள்ள பிரச்னையின் தாக்கம் குறையும்போது உலகின் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் சிக்குவார்கள் என ஆக்ஸ்பம் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 70 மில்லியன் மக்கள் வேலையின்மையின்போது அளிக்கப்படும் மானியத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இதன்மூலம், பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது தெரியவருகிறது. 1930களில் நிகழ்ந்த அழுத்தத்தின்போது சர்வதேச நிதியம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

முதல் உலக போரின் இறுதியில் பரவத் தொடங்கிய ஸ்பானிஷ் காய்ச்சலால் ஐந்து மில்லியல் பேர் உயிரிழந்தனர். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பத்தாண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த பெரும் பொருளியல் வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தது. இதனால் பல நாடுகள் பொருளாதார நிலையற்ற தன்மையில் சிக்கியது. கரோனாவின் அச்சுறுத்தல் பலரின் வாழ்க்கையில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. கண்டங்களின் பொருளாதார நிலைத்தன்மை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான நாடுகள் எல்லைகளை மூடியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதியை நம்பியுள்ள சர்வதேச வணிகம் சரிவை சந்தித்துள்ள நிலையில், வளர்ந்த நாடுகள் பாதிப்ப சந்தித்துள்ளன. உள்நாட்டு துறைகளை மீட்கும் வகையில் ஜி 20 நாடுகள் 5 ட்ரில்லியன் நிதியுதவி அறிவித்துள்ளது. ஏழை நாடுகள் சர்வதேச நிதியுதவியை நம்பியே உள்ளது. உலக வர்த்தகம் 32 விழுக்காட்டிலிருந்து 13 விழுக்காடாக குறையும் என உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது. 1930களில் ஏற்பட்ட நிலைமை போல் இப்போது நிகழும் என பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் நிகழ்ந்துள்ள சரிவை மீட்க 10 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மூன்று வார ஊரடங்கால் 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி தேவைப்படுகிறது.

இதையும் படிங்க: நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.