டெல்லி: டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் இந்த ஆண்டு, குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.4 டிகிரி செல்சியஸ் இன்று (டிச. 120 ) பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "நகரின் வெப்பநிலை 3.4 டிகிரியாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அயன்நகர் லோதி சாலையில், வெப்பநிலை 3.3 டிகிரியாக பதிவாகியுள்ளது. மேலும் நகரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
டெல்லியில் நேற்றைய (டிச. 19) வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸைவிட குறைவாக பதிவாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனை : தன்னார்வலர்கள் கிடைக்காமல் திண்டாடும் எய்ம்ஸ்!