ஆந்திரப் பிரதேசம் மாநில தலைநகரான அமராவதியில் இன்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் வருவாய் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “இனி படிப்படியாக ஆந்திராவில் ‘பார்’கள் குறைக்கப்படும். பார்களில் ஆல்கஹால் காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இந்தாண்டு முதல் வணிக வரிகள் 0.14 விழுக்காடு அதிகரிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.