புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம், திருபுவனை ஆகியப் பகுதிகளில் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி மற்றும் அலுவலர்கள் இன்று (ஏப்.7), அப்பகுதியில் செயல்பட்டுவரும் மருத்துவச் சேவைகள், வழங்கப்பட்டுவரும் அத்தியாவசியப் பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்குச் சென்று அங்குள்ள மக்கள் முகக் கவசம் அணியும்படியும் சுகாதாரமாகவும் மற்றும் கிருமி நாசினி கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.