ETV Bharat / bharat

மோடி சொன்னது உண்மைதான் - விங் கமாண்டர் தகவல்! - raghunath

டெல்லி: மேகக் கூட்டங்களால் இந்திய விமானப் படை ரேடாரிலிருந்து தப்பிக்கும் என்று மோடி தெரிவித்த நிலையில், இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ரகுநாத் நம்பியார் மோடி கூறியது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.

விங் கமாண்டர் ரகுநாத் நம்பியார்
author img

By

Published : May 27, 2019, 1:53 PM IST

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ் -இ- முகமது முகாம்களை குறிவைத்து, பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மோடி, மேகக் கூட்டங்களால் இந்திய விமானப்படை ரேடாரில் இருந்து தப்பிக்கும் என்றும் அதனால், தாக்குதலை நடத்த ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

மோடியின் இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இது தொடர்பாக, கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், "பல்வேறு வகையிலான ரேடார்கள் பல்வேறு தொழில்நுட்பத்தில் வேலை செய்யும். ஒரு சில நேரத்தில் ரேடார்கள் மேகக் கூட்டங்களுக்கிடையேயும் செயல்படுவது உண்டு. சில சமயங்களில் செயல்படாமல் இருப்பதும் உண்டு" என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏ. என். ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த விங் கமாண்டர் ரகுநாத் நம்பியார், வலுவான மேகக் கூட்டங்கள் இருந்தால் ரேடாரால் துல்லியமான இலக்கை கண்டுபிடிக்க முடியாது என்ற கூற்று உண்மைதான் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.