ETV Bharat / bharat

கோவிட்-19 முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை தெளிவுப்படுத்த கோரி மனு!

author img

By

Published : Sep 26, 2020, 8:31 PM IST

டெல்லி : திட்டமிட்டப்படி நடைபெறவுள்ள சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய கோவிட்-19 பரவல் தடுப்பு விதிமுறை நெறிகளை தெளிவுப்படுத்திடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை தெளிவுப்படுத்த கோரி மனு!
கோவிட்-19 முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை தெளிவுப்படுத்த கோரி மனு!

நாடு முழுவதுமுள்ள 22 தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியச் சட்டக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை சட்டப் படிப்புகளில் சேர “கிளாட்” (காமன் லா அட்மிஷன் டெஸ்ட்) எனப்படும் சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்தாண்டும் சட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு திட்டமிட்டப்படி செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை உணர்ந்து கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்துள்ளார்.

இதனிடையே, தேர்வை எழுதவுள்ள மாணவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், " கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில் சட்டப்படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேவைவாயன பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, கோவிட்-19 பாதிப்பைக் கொண்ட மாணவர்களுக்கும் தேர்வை எழுத தனி மையங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும். அதற்குரிய நெறிமுறைகளை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்" என கோரியுள்ளார்.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், கால அட்டவணைப்படி பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக தற்போது தனிமையில் உள்ள தேர்வாளர்கள் உள்ளிட்டோருக்கு இது குறித்து தெளிப்படுத்த வேண்டுமென தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழக (என்.எல்.எஸ்.யு.ஐ) துணைவேந்தர், தேசிய சட்ட அப்டிட்யூட் டெஸ்ட் (என்.எல்.ஏ.டி) தேர்வு மைய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.