175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஆந்திராவில் இன்று தேர்தல் நடந்து வருகிறது. கடும் போட்டி நிலவும் சூழலில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் பிரதான எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் பண்டரபல்லியில் மோதல் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சின்தா பாஸ்கர் ரெட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு பண்டரபல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, காலையில் நடந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.