ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி அக்கட்சி அலுவலகத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில், இந்திய தேசிய மாணவர் சங்கத் தலைவர் நிகில் சாவானாவுக்கு படுகாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெஸ்டர்ன் உடை மாரி வேட்டியில் பட்டைய கிளப்பிய கலெக்டர்!