புதுச்சேரி அருகே நல்லவாடு, வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலையை வீராம்பட்டினம் மீனவர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
பின்னர் கலவரம் உருவாவதைத் தடுக்கும் பொருட்டு இரு கிராமத்து மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இருகிராம மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு கிராம மீனவர்களும் கடுமையான ஆயுதங்களுடன் நடுக்கடலில் தாக்கிக்கொண்டனர். அதில் மூன்று மீனவர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.
மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய நிலையில் கடலோரத்தில் அதிகப்படியான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படியுங்க: