அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் பகுதிதான் ரஞ்சன் கோகோயின் பூர்வீகம். காங்கிரஸ் பாரம்பரியத்தில் ஊறிய குடும்பம் அவருடையது. கோகோயின் தந்தை கேசாப் சந்திர கோகோய், அஸ்ஸாம் முதலமைச்சராக இருந்தவர். நேர்மையான அரசியல்வாதி. ரஞ்சனின் அண்ணன் அஞ்சன் கோகோய் ஏர்மார்ஷலாக இருந்தவர்.
முதல் படி...
1978ஆம் ஆண்டு கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ரஞ்சன், அதே நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். 2010ஆம் ஆண்டு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி என அடுத்தடுத்து உயர்ந்தார்.
'உச்ச நீதிமன்றத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது'.. இறுதிப்பணி நாளில் உருகிய கோகாய்
அதிரடி நகர்வுகள்...
ரிலையன்ஸ் நிறுவனம் மீதான வழக்கு, குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டார். கடந்த ஆண்டில் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய கொலீஜியத்தின் நான்கு நீதிபதிகளில் ரஞ்சனும் ஒருவர். நீதிபதி கர்ணன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையையும் அவர் விமர்சித்திருந்தார். இப்பேர்பட்டவர் தலைமை நீதிபதியாக வந்ததும் பல அதிரடிகள் அரங்கேறப்போகின்றன என இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் அவர்மீதே பாலியல் புகார் அதிரடியாகக் கிளம்பியது.
ஓய்வில்...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, நவம்பர் 18ஆம் தேதி பிறந்த நாள். நவம்பர் மாதம் 2019, 17ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து அவர் ஓய்வுபெறுகிறார். அவருக்கு முன்பு 45 பேர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளனர். அவர்களின் பணி ஓய்வெல்லாம் நீதித்துறை வட்டாரத்துக்குள் மட்டுமே முடிந்துபோன செய்தி. ஆனால், ரஞ்சன் கோகோய் ஓய்வு, தேசத்தின் பேசுபொருளாகியுள்ளது.
'உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்'
டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவின் போது, நீதித்துறையை நம்பிக்கையின் கடைசி கோட்டை என்று குறிப்பிட்டார் நீதிபதி கோகோய். நீதித்துறையானது, பக்தியுள்ள, சுயாதீனமான மற்றும் புரட்சிகரமான அமைப்பாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எளிமை...
வெளிப்படைத்தன்மை கொண்ட நீதிபதிகளில் ஒருவராக நீதிபதி கோகோய் கணக்கிடப்படுகிறார். அவரது சொத்து விவரத்தில் இடம் பெற்றுள்ள, நகைகள், பணம் தொடர்பான தகவல்கள் அவர் எவ்வளவு எளிமையாக வாழ்கிறார் என்பதை எடுத்துக் கூறுகிறது. நீதிபதி கோகோயிடம் வாகனம் கூட இல்லை.
கலங்கரை விளக்கமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு!
அவரது தாயும், அசாமின் பிரபல சமூக ஆர்வலருமான சாந்தி கோகோயிடம் இருந்து ரஞ்சன் கோகோய்க்கு சில சொத்துகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, சொத்து தொடர்பான தகவல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனே அதை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி அலுவலகத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தனது வெளிப்படைத் தன்மையை நீதிபதி கோகோய் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வரலாறு பதியட்டும்...
தங்கள் தீர்ப்புகளுக்காக நீதிபதிகளை வரலாறு நினைவில் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றத்தின், நீதிமன்றம் எண் ஒன்றின் தீர்ப்புகளும் இந்த வகையில் வருபவையே. அயோத்தி வழக்கின் தீர்ப்பு நிச்சயமாக என்றென்றும் நினைவில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.