ETV Bharat / bharat

லஞ்சம் கொடுக்காததால் முட்டை வண்டியை தள்ளி விட்ட அலுவலர்கள்!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் லஞ்சம் கொடுக்காத சிறுவனின் தள்ளுவண்டிக் கடையை மாநகராட்சி அலுவலர்கள் கீழே தள்ளிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

லஞ்சம் கொடுக்கவில்லை என முட்டை வண்டியை தள்ளி விட்ட அலுவலர்கள்!

author img

By

Published : Jul 25, 2020, 7:13 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும், நாட்டில் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 30 ஆயிரத்து 601 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் 14 வயது சிறுவன் முட்டைகளை விற்றுக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், அந்த சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சமாக கேட்டு மிரட்டியுள்ளனர்.

லஞ்சம் கொடுக்கவில்லை என முட்டை வண்டியை தள்ளி விட்ட அலுவலர்கள்!

அந்தச் சிறுவன் இன்னும் வியாபாரம் ஆகாததால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளான். இருந்தபோதும், பணம் தரவில்லையெனில் இந்த இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு பதலளித்த சிறுவன், கரோனா காலம் என்பதால் வியாபாரம் ஆகவில்லை, அப்படி இருக்க வியாபாரத்தில் பங்கு கேட்பது என்ன நியாயம்? எனக் கேட்டுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி அலுவலர்கள், சிறுவனின் முட்டைகள் நிரம்பிய தள்ளு வண்டியை கீழே தள்ளியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கும் இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.