இந்திய குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை அறிமுகப்படுத்தி பேச உள்ளார். முன்னதாக இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா மக்களை மத ரீதியில் பிரிக்கிறது என்று அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் ஆக உள்ளது.
குடியுரிமை திருத்த மசோதாவில், “2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த பிட்சுகள், சமணர்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறியாக கருதப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது” குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய குடியுரிமை மசோதா: பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு