கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன் பிறப்பிடமாய் சீனா இருந்தாலும் தலைநகரமாக அமெரிக்கா விளங்குகிறது. இதுவரை, 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கான மருந்தை கண்டிபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், எச்.எல்.ஏச் (HLH) என்னும் நோயை கட்டுபடுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த ருக்சோலிட்டினிப் என்னும் மருந்து தற்போது அமெரிக்காவில் சின்சின்னாட்டி மாகாணத்தில் கோவிட் 19 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவருகிறது. இதன் விளைவாக அவர்கள் விரைவில் குணமடைந்துவருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தாண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்துகள் - உலக சுகாதார அமைப்பு