ஹரியானா
1982ஆம் ஆண்டு ஹரியானா மக்கள் மத்தியில் ஒரே பரபரப்பு. அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு காங்கிரசுக்கு இல்லை. எனினும் மாநில ஆளுநர் ஆட்சியமைக்க காங்கிரசை அழைத்தார். அப்போது வெகுண்டெழுந்த இந்திய தேசிய லோக் தளம் (Indian National Lok Dal) கட்சித் தலைவர் தேவி லால் ஆளுனரின் முடிவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை (31 பேர்) தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரும், இந்திய தேசிய லோக் ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களும் டெல்லியிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுவர் ஏறி குதித்து, காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் காங்கிரஸ் (33 எம்.எல்.ஏ.) ஆட்சி தப்பியது.
கர்நாடகா
அரசியலில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாத ஒரு மாநிலம் கர்நாடகா. அந்த அளவுக்கு அரசியல் தில்லு முல்லு காட்சிகள் அறங்கேறிய ஒரு மாநிலம். எடியூரப்பா காலை வாரிய குமாரசாமி, குமாரசாமிக்கு அல்வா கொடுத்த சித்த ராமையா என அந்த மாநிலத்தில் அரசியல் பரபரப்பு காட்சிகளுக்கு சற்றும் பஞ்சம் கிடையாது.
1983ஆம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே அரசை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நீக்கினார். அப்போது தொடங்கிய இந்த அரசியல், எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் 2004-06, 2009-11 மற்றும் 2012 விஸ்வரூபம் எடுத்தது. எடியூரப்பா சட்டபேரவைக்கு நடக்க, அவரது சகாக்கள் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் பறந்தனர்.
இதில் உச்சக்கட்ட களோபரம் 2009-11 எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் நடந்தது. அப்போது 80 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களுருவிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் குஜராத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் டி.கே.சிவக்குமார் தலைமையில் தங்க வைக்கப்பட்டனர். 2019 ஜனவரியிலும் இதேபோல் சம்பவம் நடந்தது. பாஜகவினர் அபகரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில், குஜராத் பிதாதி நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசம்
1984ஆம் ஆண்டு என்.டி.ராமாராவ் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ஆளுநர் தாகூர் ராம்லால், பாஸ்கர் ராவ்வை முதலமைச்சராக நியமித்தார். அப்போது தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி, பெங்களுருவில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இரண்டு மாதத்தில் மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தது. அப்போது சங்கர் தயாள் சர்மாவை மாநில ஆளுநராக இந்திரா காந்தி நியமித்தார். 1995ஆம் ஆண்டு நடந்த அரசியல் குழப்பத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்தார்.
குஜராத்
1995ஆம் ஆண்டு பாஜக குஜராத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது 47 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சங்கர்சிங் வகேலா பாஜக தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 7 நாட்கள் தங்க வைத்தார். பின்னர் முதலமைச்சர் ஜேசுபாய் பட்டேல் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வகேலா ஆதரவாளர் சுரேஷ் மேத்தா முதலமைச்சரானார்.
2017 ஆகஸ்ட்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவு பெற்றவர் அஹமது பட்டேல் மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதை பாஜக தடுத்தது. அப்போது பெங்களுருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம்
1998ஆம் ஆண்டு பாஜகவின் கல்யாண் சிங் அரசை ஆளுநர் ரோமேஷ் பந்தாரி கலைத்தார். காங்கிரசை சேர்ந்த ஜெகதாம்பிகா பால் என்பவரை முதலமைச்சராக நியமித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றிப் பெறவே ஜெகதாம்பிகாவின் ஆட்சி 48 மணி நேரத்தில் கவிழ்ந்தது. இதுதொடர்பாக வழக்கு அலகாபாத் நீதிமன்றத்திலும் நடந்தது.
பிகார்
காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் 2000ஆவது ஆண்டில் பாட்னாவிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அனுப்பப்பட்டனர். நிதிஷ் குமார் அரசு 8 நாளில் கவிழ்ந்தது. 2005ஆம் ஆண்டு பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்தார்.
மகாராஷ்ட்டிரா
2002ஆம் ஆண்டு பாஜக சிவசேனா கூட்டணிக்கு பயந்து காங்கிரஸ் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதிக்கு கடத்தினார்.
உத்தரகண்ட்
2016 ஆண்டு காங்கிரஸின் ஹரிஷ் ராவத் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்பூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது காங்கிரஸ் பாஜக மீதும் பாஜக காங்கிரஸ் மீது குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. தொடர்ந்து குழப்பம் நீடிக்கவே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு (2017) நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.
தமிழ்நாடு
2017ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, சசிகலா மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் சசிகலாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நீங்கலாக) சென்னை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் வெளியான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். தற்போது அவர் பெங்களுருவில் உள்ள பரப்பனா அஹ்ரகாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இந்திய அரசியலில் பல சொகுசு விடுதி அரசியல் அறங்கேறி உள்ளது. மகாராஷ்ட்டிராவில் தற்போது 162 சட்டமன்ற உறுப்பினர்கள் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்) சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியமைத்த நிலையில், அவர்கள் வசம் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லாமல் இருக்க அக்கட்சிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா விவகாரம்: இறுதி உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Intro:Body:
SECULARISM FLIES HIGH
உயரப் பறக்கும் மதச்சார்பின்மை
அயோத்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பின் பின்னர் மதச்சார்பின்மை நம் நாட்டில் வலிமை பெறுமா? அவநம்பிக்கையும் தவறான புரிதலும்நிறைந்த முப்பது ஆண்டு கால வரலாறு படிப்படியாக மறையுமா? முன்னோக்கிச் செல்லும்போது, அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் மதம்சார்ந்த இடங்களைப் பற்றிய பல்லாண்டுகால மோதல்களில் தலையிடாமல் தங்கள் வழிகளைச் சரிசெய்யுமா?
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் வன்முறை சம்பவங்கள் எதுவும் தெரிவிக்கப்படாததால், இவை மக்களின் மனங்களில் எழும் கேள்விகளாக உள்ளன.
உச்ச நீதிமன்றம் அதன் 1,110 பக்க, நீண்ட தீர்ப்பில் மதச்சார்பின்மை பற்றி பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தது. இது பல கேள்விகளைப் பற்றித் தெளிவுபடுத்தியது, இதனால் எதிர்காலத்தில் மதச்சார்புள்ள இடங்களைப் பற்றிய சர்ச்சைகள் இருக்காது. மத்திய காலகட்டத்தில் நடந்த அநீதி இழைக்கப்படுவது அல்லது பிற மதங்கள் அத்துமீறல் செய்வது என்ற சாக்குப்போக்கின் கீழ் எந்தவொரு வன்முறைச் செயலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அது அறிவித்தது.
பாபர் மசூதியை இடித்தது சட்டத்தை மீறுவதாகவே கருதப்படுகிறது, இது திடீர் உந்துதலால் நிகழ்ந்த தற்காலிக நிகழ்வாகக் கருதப்படவில்லை. 450 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானஙகளான அவர்களின் வழிபாட்டுத் தலத்திலிருந்து இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக இது கருதுகிறது. சம நீதிக்குக் கட்டுப்பட்ட இந்தியா போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அத்தகைய செயல் தேவையற்றது என்று அது மேலும் கூறியது. அதே காரணத்திற்காக, நீதிமன்றம் தனது தீர்ப்பில், அவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்படாவிட்டால் நீதியை வழங்க முடியாது என்று கூறியது.
நாட்டில் ஒரு பகுதியினர் மதச்சார்பின்மையை மேற்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி அதைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். 1920 களில் இருந்து இந்த விசித்திர வாதம் உள்ளது, தங்கள் தேசத்தை ஒரு செயல் அல்லது வழிபாட்டுத் தலமாகப் பார்க்க முடியாதவர்கள், மற்ற நாடுகளை உதாரணமாக காட்டுபவர்கள் ஒருபோதும் தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது.
கடந்த மூன்று பத்தாண்டுகளில், இந்த யோசனை வலுப்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் படி வாழ்வது போதாது என்று சிலர் நம்புகிறார்கள். தலைமுறைகள் பழமையான கலாச்சாரத்தால் ஈர்க்கப்படாமல் தேசியவாதத்தை நிறுவ முடியாது என்று நினைக்கும் அறிவுஜீவிகளுக்குப் பஞ்சமில்லை.
ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் தகராறின் பின்னர், மதச்சார்பின்மை பற்றிய கருத்து குறித்து பரவலான விவாதங்கள் நடந்தன.சூது-மதச்சார்பின்மை என்ற சொல் அரசியலில் நிறைய புகழ் பெற்றது.
1,500 கஜம் சர்ச்சைக்குரிய நிலத்தைத் தீர்மானிக்க மதநம்பிக்கைகளை மட்டுமே கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பல இடங்களில் தெளிவுபடுத்தியது. தீர்ப்பு மதச்சார்பின்மை, சம நீதி , சரியான சான்றுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது என்று அது கூறியது. கோயில்-மசூதி மோதல் அரசியல் ரீதியாக நாட்டை உலுக்கியது மட்டுமல்லாமல் மதச்சார்பின்மையையே ஏற்ற தாழ்வுகளுக்கு உட்படுத்தியது.
இதைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விளக்கம் அளித்தது. நீதிமன்றம் மதச்சார்பின்மையை ஒரு தனிப்பட்டோர் தேர்வாகவோ அல்லது சித்தாந்தமாகவோ பார்க்கவில்லை. மதச் சகிப்புத்தன்மை மதச்சார்பின்மையின் உட்கருத்து என்றும் அது அரசியலமைப்புக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்றும் அது கூறியது. மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீற முடியாத பகுதியாகும் என்று அது மேலும் கூறியது. நீதித்துறை, அரசு மற்றும் குடிமக்கள் மதச்சார்பின்மைக்கு கட்டுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நீதிபதி குழு பொம்மை வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஜீவன் ரெட்டி மதச்சார்பின்மைக்கு தெளிவான வரையறை அளித்தார். மத மோதலின் போது நடுநிலை நிலைப்பாடு மதச்சார்பின்மை என்று கருதப்படுவதில்லை என்று அவர் கூறினார். அயோத்தி தீர்ப்பின் போது, உச்சநீதிமன்றம் ஜீவன் ரெட்டியின் வார்த்தைகளை நினைவூட்டியது, “மதச்சார்பின்மை என்பது நாம் ஏற்க வேண்டிய மிக உயர்ந்த குறிக்கோள் என்றும் அது இந்திய அரசியலமைப்பின் பிரிக்க முடியாத பகுதி” என்றும் கூறியது
மத வழிபாட்டுத் தலங்கள் பற்றி மேலும் சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ பலமுறை குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 15, 1947 வரை இருந்த எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் செய்யப்பட்டது. பிற மதங்கள் தங்கள் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அறிவித்து பழிவாங்க யாராவது முயன்றால், இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள்.
வழிபாட்டுத் தலங்களை மாற்றக் கேட்கும் எந்தவொரு வழக்கையும் எடுத்துக்கொள்வதை இந்தச் சட்டம் தடைசெய்தது. அயோத்தி வழக்கு இந்தச் செயலிலிருந்து விலக்கு அளித்தது. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் செயல் செய்யப்பட்டதாகவும், அதை யாரும் மீறக் கூடாது என்றும் மன்றம் கூறியது . ஆழ்பற்றும் நம்பிக்கையும், மக்கள்தொகையில் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை பிரிவினராக இருந்தாலும், ஒரு நிலத்தின் சரியான உரிமையைத் தீர்மானிக்க முடியாது.
சட்டங்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றிய பின்னரே சரியான முடிவுக்கு வந்ததாக உ.நீ மன்றம் கூறியது. முஸ்லீம் கட்சி வழக்கறிஞர்களைத் தவிர, பல புத்திஜீவிகள் கோட்பாடு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர். இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அதன் தீர்ப்பின் அடிப்படையை முடிந்தவரை விளக்கியுள்ளது.
பாபர் மஸ்ஜித்தின் பாரம்பரியத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. மசூதி வளாகத்தில் 1949 டிசம்பரில் இந்து தெய்வங்கள் அமைக்கபடுவதையும் மறுக்கவில்லை. 1949 டிசம்பர் 16 ஆம் தேதி வரை முஸ்லிம்கள் அங்கு தொழுகை செய்தார்கள் என்பதை அது ஒப்புக்கொண்டது. இந்து தெய்வங்களை அங்கு வைத்த பிறகே தொழுகை நிறுத்தப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதான வளாகத்தில் இருந்த மூன்று குவிமாடங்கள் 1857 க்கு முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை முஸ்லிம் தரப்பினரால் நிரூபிக்க முடியவில்லை.
அவத் அரசு 1856 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. 1857 க்கு முன்பே இந்துக்கள் பிரார்த்தனை செய்ததற்கான சான்றுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது. இந்து-முஸ்லீம் மோதலைத் தவிர்க்க, 1857 இல் பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த 1500கஜ தூரத்தில் நடுவில் ஒரு சுவரைக் கட்டினர் அப்படியிருந்தும், இந்துக்கள் முழு பகுதியையும் ராம் ஜன்மபூமி என்று கருதுவதை நிறுத்தவில்லை. அவர்கள் அந்த இடத்தின் மற்ற பாதியிலும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரதான குவிமாடம் கோவில் கருவறை என்று நம்புவதை அவர்கள் நிறுத்தவில்லை, பல முறை அங்கு செல்ல முயன்றனர்.
1877 ஆம் ஆண்டில், இந்துக்களின் கோரிக்கையின் பேரில் நிலத்தின் மறு பகுதிக்கு இரண்டாவது நுழைவாயில் உருவாக்கப்பட்டது. ராம் நவமி, கார்த்திகை பௌர்ணாமி போன்ற சந்தர்ப்பங்களில் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இந்து மற்றும் முஸ்லீம் கட்சிகளைச் சேர்ந்த சாட்சிகள் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டுப் பயணிகள் வழங்கிய தகவல்களை அரசிதழ்கள் உறுதிப்படுத்தின.
இந்திய தொல்பொருள் ஆய்வு மைய (ஏ.எஸ்.ஐ) அறிக்கை மசூதிக்கு அடியில் 12 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தின் கலைப்பொருட்கள் இருந்தன என்பதை வெளிப்படுத்தியது.. அந்த கட்டுமான எச்சங்களில் மசூதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
ஏ.எஸ்.ஐ அறிக்கை வெளிப்படுத்திய சில முக்கிய விஷயங்களை நீதிமன்றம் நினைவுபடுத்தியது. அடியில் ஒரு இந்து கோவிலின் கலைப்பொருட்கள் இருந்தன, ஆனால் கோயில் ஏன் அழிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தவில்லை என்று அறிக்கை கூறுகிறது. மசூதி கட்டும் பொருட்டு கோயில் அழிக்கப்பட்டதா என்று அது பதிலளிக்கவில்லை. இந்த கட்டுமான எச்சங்கள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்த மசூதியோ 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இடையில் 4 நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளது.
அந்த 400 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து ஏ.எஸ்.ஐ அறிக்கை எந்த தகவலையும் சமர்ப்பிக்கவில்லை. இந்து மதத்தின் சின்னங்களைக் கொண்ட கலைப்பொருட்களை மசூதி பயன்படுத்தியதாக அறிக்கை உறுதிப்படுத்தவில்லை. மசூதி கட்டுமானத்தில் கருப்பு கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் அவை முந்தைய இந்து கோவிலைச் சேர்ந்தவையா என்று குறிப்பிடவில்லை என்று அறிக்கை கூறியுள்ளது.
மொத்தத்தில், 1857 க்கு முன்னர் இந்துக்கள் செய்த வழிபாட்டின் சான்றுகளையும், ராம் ஜன்மபூமி என்ற இடத்தை கருத்தில் கொண்ட பல நிகழ்வுகளையும் உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் தீர்ப்பை வழங்கியது. மறுபுறம், நீதிமன்றம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை, அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியையும் குறிப்பிட்டுள்ளது. மசூதி இடிக்கப்படுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த அறிக்கைகளே இதற்கு போதுமான சான்றுகள்.
உச்சநீதிமன்றம் எதிர்பார்த்தபடி அரசாங்கங்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்து, 1991 சட்டத்தின்படி மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாத்தால், ஜனநாயகம் வரவிருக்கும் பல பத்தாண்டுகளில் அப்படியே இருக்கும். மேலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளின் வெறுப்பு உணர்வுகளும் மங்கிவிடும்.
Conclusion: