நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு விதமான சிலைகள், விதவிதமான அலங்காரங்கள், வித்தியாசமான வடிவில் பிள்ளையார் சிலைகள் என நாடே சதுர்த்தியை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிதி வெர்மா என்ற பெண் சாக்லேட்டால் விநாயகர் சிலையை தயாரித்துள்ளார். அந்த விநாயகர் சாக்லேட், பால் உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக அவர், "வித்தியாசமான முறையாக இருந்தாலும் அது உபயோகப்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்ததுதான் சாக்லேட் விநாயகர். இந்த சாக்லேட் விநாயகர் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.