ETV Bharat / bharat

சின்மயானந்தா வழக்கில் திருப்பம்!

லக்னோ: பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவியின் கைப்பையை சிறப்புப் புலனாய்வுக் குழு சின்மயானந்தா ஆசிரமம் அருகே கைப்பற்றியது.

Chinmayananda
author img

By

Published : Nov 4, 2019, 10:26 AM IST

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்திவருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார்.

இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், சின்மயானந்தா கைது செய்யப்பட்ட நிலையில் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை காரணம்காட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீர் திருப்பமாக பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்கவைத்ததாக சின்மயானந்தா வழக்குத் தொடர்ந்தார். பணம் பறிப்பு வழக்கில் தன்னை கைது செய்வதிலிருந்து தடைவிதிக்கக் கோரி, சட்டக்கல்லூரி மாணவி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர், சட்டக்கல்லூரி மாணவியை காவல் துறையினர் கைது செய்து 14 நாள்கள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் கைப்பையையும் சில புத்தகங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு சின்மயானந்தா ஆசிரமத்திற்கு அருகே உள்ள வாய்க்காலிருந்து எடுத்தனர்.

மேலும், சின்மயானந்தாவுக்கு எதிரான வாக்குமூலங்களைப் பதிவு செய்த மாணவியின் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை சிறப்புப் புலனாய்வுக் குழு வாய்க்காலில் தேடிவருகிறது. மேலும், சின்மயானந்தாவின் பிணை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நவம்பர் 8ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.