லடாக்கில் உள்ள இந்திய-சீன நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவிவருகிறது.
இந்தப் பிரச்னையை அமைதியாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டமாக, இந்திய சீனப் படைகளைச் சேர்ந்த துணை ராணுவ தளபதிகள் வரும் 6ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தச்சூழலில், கல்வான் பள்ளத்தாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் படையினர் சில நூறு மீட்டர்கள் பின்வாங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மூன்று நாள்களாக இந்த முக்கிய நகர்வையும் மேற்கொள்ளாமலிருந்த சீனப் படை தற்போது பின்வாங்கி இருப்பது நல்ல சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 225 முக்கிய பிரமுகர்கள் இணைந்து ஜி20 நாடுகளிடம் நிதி கோரல்!