ETV Bharat / bharat

கல்வான் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து பதிலளிக்க மறுத்த சீன தூதர் - ஸ்மிதா சர்மா

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற கேள்விக்கு சீன தூதர் சன் வெய்டாங் பதிலளிக்க மறுத்திவிட்டார்.

சீன தூதர்
சீன தூதர்
author img

By

Published : Jul 31, 2020, 2:35 AM IST

சீனக் கல்விக் கழகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார். ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் சீன தரப்பு சார்பாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு இந்திய ராணுவ வீரர்களே காரணம் என அவர் மீண்டும் குற்றம் சுமத்தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கல்வான் சம்பவத்தில் எது சரி, எது தவறு என்பது தெளிவாக உள்ளது. அங்கு நடைபெற்ற மோதலுக்கு நாங்கள் பொறுப்பில்லை. அமைதியை நிலைநாட்ட சீனா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவிற்கு வியூக ரீதியான அச்சுறுத்தலை விளைவிக்கவில்லை. இரு நாடுகள் முயற்சி மேற்கொண்டதன் மூலம் இரு தரப்பு ராணுவமும் பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் படைகளைத் திரும்பபெற்றுக்கொண்டன. தற்போது பதற்றம் குறைந்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கை சீனா சொந்தம் கொண்டாடவது புதிது, நியாயமற்றது என்ற வாதத்தை மறுக்கிறேன். பாங்கோங் ஏரியின் வடக்கு பகுதியில், எல்லை ஒப்பந்தத்தின்படியே படைகளை நிறுத்தியுள்ளோம். எந்தப் பகுதியையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. ஒரு நாடு எல்லைப் பகுதியைத் தானாக வரையறுத்துக் கொண்டால், சிக்கல்தான் உருவாகும். எல்லைப் பகுதி ஒப்பந்தத்திற்கு எதிராகவே இது அமையும்" என்றார்.

இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஒ ஃபாரேலை தொடர்புகொண்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இந்திய, சீன விவகாரம் குறித்து இதில் பேசப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என பேர்ரி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: உலகளாவிய சுற்றுலாவைத் தொடங்குவதற்கு கால அளவு இல்லை, செலவுகள் அதிகரிக்கும் - நிபுணர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.