இடாநகர்: செப்டம்பர் 2ஆம் தேதி காணாமல் போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சீனாவில் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் சனிக்கிழமை இந்திய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜு வெள்ளிக்கிழமை (செப்.11) தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் ரிஜிஜு மற்றும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி., ஆகியோர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், "அருணாச்சல பிரதேசத்திலிருந்து மாயமான இளைஞர்கள் எங்கள் பக்கம் இருப்பதாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இவர்கள் நாளை (செப்.12) இந்திய அலுவலர்களுடன் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேச இளைஞர்கள் சர்வதேச எல்லைக் கோட்டு பகுதியை தாண்டி சென்றதை இந்திய ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியா, சீனா உடனான கொள்கைகளை ஜோ பிடன் வாபஸ் பெற மாட்டார்' - நிபுணர்கள் கருத்து