இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து அகமதாபாத் மொடீரா மைதானத்தில் நடைபெற்ற 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பங்குகொண்ட "நமஸ்தே ட்ரம்ப்" நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளோம் என தெரிவித்த அவர், ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தங்கள் நாளை (இன்று) நடைபெறும் எனவும் கூறினார்.
இது 300 கோடி டாலர் ஒப்பந்தம் எனத் தெரிவித்த ட்ரம்ப், சிறப்பாக வியாபாரம் செய்கிறார் என பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா அமெரிக்க இடையே வர்த்தக ரீதியான உறவு அதிகரித்தாலும், இது அமெரிக்காவிற்கு அதிக பலனை அளிக்கும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் 300 கோடி டாலர் ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு 24 எம்.எச் 60 சிகோர்ஸ்கி ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படைக்கு கிடைக்கும். மிகப்பெரிய ராணுவ ஆயுதமாக பார்க்கப்படும் இந்த 24 எம்.எச் ஹெலிகாப்டர்கள் போர்க் கப்பல்களில் நிறுத்தப்படும்
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் மிக வலிமை வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி, ட்ரம்ப் புகைப்படம் கொண்ட பாட்டில் ஃபிரேம்!