ETV Bharat / bharat

சீனா இந்தியா மீது போர் மீண்டும் அரங்கேறுகிறதா? - சீனா இந்தியா மீது போர்

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் கியூபா பிரச்சினைகளை எதிர்கொண்டபோது சீனா இந்தியா மீது போர் தொடுத்ததை போல, உலகமெங்கும் கோவிட்-19 தொற்றுனோயில் பிரச்சனைகளின் போது அதனை சாதகமாக்கி மீண்டும் இந்தியா மீது போர் தொடுத்துள்ளது.

China exploiting global war
China exploiting global war
author img

By

Published : Jun 18, 2020, 6:59 PM IST

தலைப்பு முதல் செய்தி முழுவதும் திருத்தி தேவையில்லாத பத்திகளை நீக்கி எழுத்துப் பிழையின்றி அனுப்பவும்

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போரை சாதகமாக்கி தனது சுயநலத்துக்காக இந்தியா மற்றும் மற்ற நாடுகளை சீனா துன்புறுத்தி வருகிறது.

அண்மையில் இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் என்பது கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தையும் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பிரச்சினைகளையும் தனக்கு சாதகமாக்கி கொள்வதற்காக சீன அரசாங்கத்தின் கவனமாக கணிக்கப்பட்ட நடவடிக்கை என்றும், அதன் எல்லையில் உள்ள தற்போதைய நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கை என்றும் ராணுவம் மற்றும் போர் தந்திர நிபுணர்கள் நம்புகின்றனர்.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1962 குளிர்காலத்தில், கியூபாவில் சோவியத் யூனியன் தனது ஏவுகணைகளை நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரு வல்லரசுகளுக்கு இடையே ஏற்பட்ட அணுசக்தி தொடர்பான நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கிய சீன தந்திரத்தின் ஒரு தெளிவான நினைவூட்டல் இது.

பல ஆண்டுகளாக இரு வல்லரசுகளுக்கிடையில் ஒரு பிரச்சினையாக இருந்த கியூபா ஏவுகணை விவகாரம், 1962 ஆம் ஆண்டில் அக்டோபர் 16 அன்று முழுமையாக வெடித்தது.

அதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தியது தொடர்பாக வல்லரசுகள் – அமெரிக்காவும் மற்றும் முந்தைய சோவியத் யூனியனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருந்த நெருக்கடியில், ​​இந்தியா-சீனா போரில் தலையிடும் நிலையில் இல்லாதபோது அக்டோபர் 20, 1962 அன்று சீனா இந்தியாவைத் தாக்கியது..

அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி அக்டோபர் 22, 1962 அன்று கியூபாவை அமெரிக்க கடற்படை முற்றுகையிட உத்தரவிட்டார். இரு நாடுகளுக்கிடையில் தீவிரமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 1962 நவம்பர் 21 அன்று அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

அதே நேரத்தில் 1962 அக்டோபர் 20-ம் தேதி சீனா இந்தியாவுக்கு எதிரான போரைத் தொடங்கி, அதன் இராணுவ நோக்கங்களை அடைந்த பின்னர் 1962 நவம்பரில் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தது.

சீனப் பிரதமர் சூ என்லாய் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அக்டோபர் 19, 1962 அன்று அறிவித்தார், இது 1962 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது, அமெரிக்காவின் கியூபா கடற்படை முற்றுகையும் முறையாக முடிவுக்கு வந்தது.

“போர் தொடுக்கப்பட்ட காலம் மிகவும் முக்கியமானது. ஊடுருவல், நிலைப்பாடு மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புகள் இவை அனைத்தும் தற்செயலானவையும் அல்ல, இது ஒரு சாதாரண விஷயமுமல்ல” என்று ஷாங்காயில் இந்தியாவின் துணைத் தூதராக இருந்த புது தில்லியைச் சேர்ந்த முன்னாள் தூதர் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.

"கால அளவு, போர் தொடுக்கப்பட்ட நேரம் மற்றும் பல காரணிகளால் இது நன்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும். உயர்மட்ட அதிகார மையத்தின் அனுமதியின்றி இது நிச்சயமாக நடந்திருக்காது” என்று தூதர் விஷ்ணு பிரகாஷ் ஈடிவி பாரத்திடம் கூறினார்.

தென் கொரியாவிற்கான இந்தியாவின் தூதராகவும், கனடாவுக்கான தூதரக உயர் அதிகாரியாகவும் இருந்த இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் சீனா நடத்திய அத்துமீறல்களை சுட்டிக்காட்டுகிறார்.

“ஒவ்வொரு நாடும் ஏதாவது திட்டமிடும்போது அதற்கான தகுந்த காலத்தை பார்க்கும், சீனர்கள் கோவிட்-19 நெருக்கடியை ஒரு சரியான நேரமாக பார்த்தார்கள்” என்று இந்திய இராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தில் கமாண்டிங் ஆபிசராக லடாக் பிராந்தியத்தில் நாட்டின் சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) தீபேந்திர சிங் ஹூடா கூறினார்

"அனைத்து நாடோளும் எதையாவது திட்டமிடும்போதெல்லாம் அதனை செயல்படுத்துவதற்கான சாதகமான நேரத்தைப் பார்ப்பார்கள், இது ஒரு பெரிய குறிப்பிடத்தக்க நடவடிக்கை, எனவே அவர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச நிலைமைகள் என்ன என்பதை அவர்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பார்கள்" என்று டி.எஸ். ஹூடா ஈடிவி பாரத்திடம் கூறினார்.

"கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஈடுபட்டுள்ளதை அவர்கள் கண்டார்கள், எனவே இது ஒரு சந்தர்ப்ப தருணம் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்" என்று ஜெனரல் ஹூடா மேலும் கூறினார்.

இந்தியாவின் முன்னணி சிந்தனைக் குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் புகழ்பெற்ற அணு மற்றும் விண்வெளி கொள்கை முன்முயற்சியின் தலைவரான டாக்டர் ராஜேஸ்வரி ராஜகோபாலன் கூறுகையில், கடந்த 5-6 ஆண்டுகளில் சீனா தனது இராணுவ மற்றும் உத்தி திறன்களை வளர்த்து வருகிறது. அதன் அண்டை நாடுகளுடன் எல்லைகளை மாற்றுவதற்கான சந்தர்பத்தை எதிர்பார்க்கிறது.

"நிச்சயமாக அவர்கள் இதைத் திட்டமிட்டே செய்துள்ளனர், இது ஒரே இரவில் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல" என்று ராஜேஸ்வரி ராஜகோபாலன் ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்.

அதிக உயரமுள்ள பகுதிகளில் தனது இராணுவத்தின் செயல்பாட்டு அனுபவமின்மையை இராணுவம் மற்றும் விமானப்படை இரண்டையும் உள்ளடக்கிய கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிவர்த்தி செய்ய சீனா முயற்சிப்பதாக அவர் கூறினார்.

"கடந்த 5-7 ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி மண்டலம் மற்றும் சீன-இந்தியா எல்லைப் பகுதிகளில் சீன இராணுவத்தின் பயிற்சிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இராணுவ செயல்பாட்டு திறன்களில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு, குறிப்பாக அதிக உயரமுள்ள பகுதிகளில் கூட்டுத்தன்மையை அதிகரிப்பதற்கு, சீன இராணுவம் மற்றும் சீன விமானப்படை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அவர்களின் கூட்டு இராணுவப் பயிற்சிகளை அவர்கள் அதிகரித்துள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,”டாக்டர் ராஜேஸ்வரி குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் சீனா தனது அனைத்து அண்டை நாடுகளிலும் ஊடுருவி வருவதாகவும், அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார்.

"நிச்சயமாக, அவர்கள் அதை சிறிது காலமாகத் திட்டமிட்டு செய்து வருகிறார்கள், உண்மையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முழு உலகமும் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தை ஒரு சரியான சந்தர்ப்பமாக அவர்கள் பார்க்கிறார்கள்" என்று டாக்டர் ராஜேஸ்வரி கூறினார்.

கடந்த மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல்களின் வீடியோக்கள் வெளிவந்ததிலிருந்து இந்த பிரச்சினை தொடங்கியது.

இரு நாடுகளும் பின்னர் தமது கனரக ஆயுதங்களை அங்கு நிறுத்தி பலப்படுத்திக் கொண்டாலும் அரசு உயர்மட்ட மற்றும் உயர்மட்ட இராணுவத் தளபதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் நிலைமையின் தீவிரத்தை குறைக்க முயன்றன.

குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இரு நாடுகளும் ஜூன் 6 ம் தேதி லெப்டினென்ட் ஜெனரல் மட்டத்தில் தங்கள் உயர்மட்ட தளபதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, சண்டை நடந்த பகுதிகளிலிருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன, அதைத் தொடர்ந்து இராணுவத் தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எவ்வாறாயினும், திங்கள்கிழமை இரவு இந்திய இராணுவத்திற்கும் சீன சிப்பாய்களுக்கும் இடையிலான வன்முறை இந்த நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு அதிர்ச்சியை தந்துள்ளது. கர்னல் உட்பட தமது வீரர்கள் 20 பேரை இழந்ததாக இந்திய ராணுவம் உறுதிப்படுத்திய நிலையில், சீனா அதன் உயிரிழப்புகளை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜூன் 6 ம் தேதி மூத்த இராணுவத் தளபதிகளிடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை மீறி கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா நிலையை மாற்றியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது.

சீனாவின் தந்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷ்ணு பிரகாஷ், "இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்கான சீன உத்தியைப் பற்றி பலரும் பேசியுள்ளனர். முதலில் இரண்டு அடிகள் முன்னேறி பின்னர் ஒரு அடி பின்வாங்குவது என்பது சீனாவின் தந்திரம் ஆகும்” என்று கூறினார்

2017 ஆம் ஆண்டு டோக்லாம் சீனாவுடன் இராணுவத் தலைவராக இருந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், கொஞ்சம் கொஞ்சமாக இந்திய நிலப்பரப்பை ஆக்ரமிக்கும் சீனாவின் தந்திரம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்.

“சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்வதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள்” என்று தூதர் விஷ்ணு பிரகாஷ் குறிப்பிட்டார்.

சீனா நிச்சயமாக ஒரு வகையான துஷ்பிரயோகம் மற்றும் ஆவேசமான இராஜதந்திரத்திற்கு மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்..

"தென் சீனக் கடல் பிராந்தியத்தில், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளுடன் கூட அவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பாருங்கள்" என்று அவர் ஈடிவி பாரத்-திடம் கூறினார்.

சமீபத்திய காலங்களில் சீன விரிவாக்க கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடு இந்தியா மட்டுமல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"அவர்கள் (சீனத் தலைமை) பலமாக உள்ளதாகவும், அமெரிக்கா பலவீனமாக இருப்பதாகவும் நினைக்கறார்கள், இதைத்தான் ஜி ஜின்பிங் நம்புகிறார், இதில் அதீத நம்பிக்கையும் ஆணவமும் உள்ளது" என்று டாக்டர் ராஜேஸ்வரி ராஜகோபாலன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தைவான், வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்துள்ளதால் சீனக் கொள்கைகளுக்கு எதிராக பின்னடைவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கிறார்.

"அனைவரும் சீனாவின் சீண்டல்களை அறிந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், எனவே சீனாவின் சாகசத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்று அவர் ஈடிவி பாரத்-திடம் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.