ETV Bharat / bharat

புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் தளர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அரியாங்குப்பம் சொர்ணா நகர், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இன்றுடன் 14 நாள்கள் நிறைவடைவதால், நாளை முதல் அப்பகுதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட காணொலி
முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட காணொலி
author img

By

Published : Apr 15, 2020, 9:52 AM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கம் வகையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் அரசின் விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் கூறியதை புதுச்சேரி மக்களாகிய நாமும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நமது மாநிலத்திலும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாக்க முடியும்.

முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட காணொலி

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அரியாங்குப்பம் சொர்ணா நகர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டு இன்றுடன் 14 நாள்கள் நிறைவடைகிறது. ஆகவே அங்கு நாளை முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவசர கால பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.