மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அங்கு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை மொத்தம் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 975 சட்டவிரோதமான ஆயுதங்களையும் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே வாக்குக்கு பணம் தருவதாக ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை மகாராஷ்டிராவில் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், சட்டவிரோதமாக வாக்காளருக்கு பணம் தர அரசியல் கட்சிகள் முயலும் என்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: