டெல்லி: நிதி ஆயோக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “செப்டம்பர் 2019இல் நடந்த நிதி ஆயோக் முதலமைச்சர்கள் குழு கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கான விவாதங்கள் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்த அறிக்கையும் தயாரானது.
ஆனால் தற்போது 16 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரையில் நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாக குழுவில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
அந்த அறிக்கையை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அஞ்சலி பரத்வாஜ் எனும் தன்னார்வலர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிதி ஆயோக் அமைப்பு நிராகரித்துள்ளது.
இது முற்றிலும் மோசமான நடைமுறையை காட்டுகிறது. மக்களுக்கான அடிப்படை உரிமையை பறிப்பதற்கு சமம். எனினும் இதனை முன்னெடுத்த அஞ்சலிக்கு எனது சல்யூட்” என்று குறிப்பிட்டிருந்தார்.