ETV Bharat / bharat

'முற்போக்கு கருத்துக்கு கிடைத்த வெற்றி'- நியூசி., தேர்தல் குறித்து ப.சிதம்பரம்! - 'unity over division' remark

டெல்லி: முற்போக்கான கருத்துகள் மூலம் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நியூசிலாந்து தேர்தல் நமக்கு உணர்த்துகிறது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம்
சிதம்பரம்
author img

By

Published : Oct 18, 2020, 5:02 PM IST

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவது இதுவே முதல்முறையாகும். ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 விழுக்காடு வாக்குகள் பெற்ற நிலையில், கன்சர்வேட்டிவ் தேசிய கட்சி 27 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு, இரண்டு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிலாளர் கட்சி முதன்முறையாக தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது. இதனை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம், முற்போக்கான கருத்துகள் மூலம் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நியூசிலாந்து தேர்தல் நமக்கு உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அச்ச உணர்வை ஒப்பிடுகையில் நாங்கள் நம்பிக்கையை தேர்ந்தெடுப்போம். பிரிவினைவாதத்தை விட ஒற்றுமையையும் கற்பனையை விட அறிவியலையும் பொய்களை விட உண்மையையுமே தேர்ந்தெடுப்போம்.

அதேபோல்தான், பிகார், மத்தியப் பிரதேச மக்கள் இந்த மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது செய்ய வேண்டும். முற்போக்கான கருத்துகள் மூலம் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நியூசிலாந்து தேர்தல் நமக்கு உணர்த்துகிறது" என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும் களம் இறங்குகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேறுவேன் - ட்ரம்பின் திடீர் முடிவின் காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.