இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், “பிப்ரவரி 23ஆம் தேதியன்று, இட ஒதுக்கீட்டிற்காக ‘பாரத் பந்த்’ பீம் ஆர்மி அழைத்தது, இந்த அறவழிப் போராட்டத்தில் எந்த வன்முறையும் உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஆனால், முழு பிரச்னையை மடைமாற்ற பாரதிய ஜனதா கட்சி மறுநாள் வன்முறையைத் தூண்டியது. இதனால் சி.ஏ.ஏ., என்.ஆர்.சிக்கு எதிராகப் போராடும் மக்களை அந்த இடத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
மத்திய அரசு விரும்பியிருந்தால் மக்கள் படுகொலைசெய்யப்படுவதைத் தடுத்திருந்து இருக்க முடியும். ஆனால் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த பாஜக அரசு விரும்புகிறது. அப்படி அச்சத்தை ஏற்படுத்தினால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவர் என இந்த அரசு நினைக்கிறது.
இதற்காகவே, மத்திய பாஜக அரசு வன்முறையைத் தூண்டுகிறது. இந்த வன்முறைக்கு காரணமான குற்றவாளிகள் மீது டெல்லி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
நாங்கள் தொடர்ந்து வடகிழக்கு டெல்லி மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். வால்மீகி, ரவிதாஸ் போன்ற கோயிலை அம்மக்களுக்காக திறந்துவைத்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம். அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட நாம் ஒன்றாக இணைந்து நிற்போம்” என அவர் தெரிவித்தார்.
பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து கருத்து தெரிவித்த ஆசாத், ''எனக்குப் பிரச்னைகள் இருந்தால் அவர் காவல் துறையினரிடமோ அல்லது அலுவலர்களிடமோ புகார் செய்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார்? இப்போது, முழு டெல்லியும் அவரது வன்முறைத் தூண்டும் பேச்சால் பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க : கன்னையா குமார் மீதான தேசத்துரோக வழக்கு தொடர்பில் நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு அனுமதி!