ராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்திலுள்ள கமலேஷ்வர் மாதவ் சிவன் கோயிலுக்கு 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றுவிட்டு படகில் திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுபாகரன் புலி, "படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகில் பயணித்த 19 பேர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். 13 பேர் தண்ணீரிலேயே மூழ்கி உயிரிழந்தனர்" என்றார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பக்தர்களை ஏற்றிச் சென்ற படகின் தகுதிச் சான்று இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி அளிக்கும் காணொலி