அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புடன் பேசிய மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன், கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டும். ஆனால், சில மாநில அரசுகள் கரோனா பிரச்னையை அரசியல், சுய விளம்பரத்திற்காக பயன்படுத்துகின்றன. அவர்கள் மக்களின் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டும். உலகிலேயே கரோனா இறப்பு விகிதம் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது" என்றார். மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு மாநில அரசு, மத்திய அரசுக்கிடையேயான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளது.
அவை எந்தெந்த மாநில அரசுகள் என்று பெயரைக் குறிப்பிடவில்லையென்றாலும், அவருடையே பேச்சு மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநில அரசுகளைக் குறிப்பதாகவே இருந்தது.
முன்னதாக, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே எவ்வித வேறுபாடு இல்லையென்றும், ஒன்றுபட்டே கரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.