ETV Bharat / bharat

அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் - உச்ச நீதிமன்றம் - அலுவல் மொழி சட்டம்

டெல்லி: அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Aug 13, 2020, 8:33 PM IST

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்த அறிக்கையை பிராந்திய மொழிகளில் வெளியிடாத காரணத்தால், டெல்லி உயர் நீதிமன்றம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடுத்தது. இந்நிலையில், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நோக்கம் சரி என கருத்து தெரிவித்தது. இதுகுறித்து பாப்டே கூறுகையில், "பிராந்திய மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்படாதது சட்டத்தின் அடிப்படையில் சரியான நடவடிக்கையே. இருப்பினும், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

மொழிமாற்றம் செய்வது எளிதான ஒன்றே. மொழிமாற்றம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மென்பொருள் உள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது. எனவே, அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்" என்றார். அலுவல் மொழி விதிகளின்படி, இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் அறிக்கையை வெளியிட்டால் போதுமானது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தது.

முன்னதாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்த அறிக்கையை பத்தே நாள்களில் 22 இந்திய மொழிகளில் வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய சித்தராமையா !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.