கரோனா பாதிப்பு தொடர்பாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் உரையாடினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நேரச் சிக்கல் காரணமாக சில மாநில முதலமைச்சர்கள் பேச முடியவில்லை.
இந்த கூட்டத்திற்கு பின் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, லாக்டவுன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தெரிவிக்கும் அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. மத்திய அரசு லாக்டவுனை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவித்துள்ளது. ஆனால், சில கடைகள், நிறுவனங்களை திறந்துகொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. நிறுவனங்களை இயக்கும் பட்சத்தில் லாக்டவுனை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்.
எனவே, மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொண்டு, இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என மம்தா அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை மேற்கு வங்க மாநிலத்தில் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- மோடி