ETV Bharat / bharat

ஹத்ராஸ் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி! - ஹத்ராஸ் வழக்கு சிபிஐ

டெல்லி: ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் வன்புணர்வு வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

CBI
CBI
author img

By

Published : Oct 11, 2020, 2:44 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் 19 வயது இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்பெண், அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், செப்.29ஆம் தேதி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால், இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உ.பி. அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்தது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு : நீதி கேட்டு விசிக ஆர்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.