ETV Bharat / bharat

பாதுகாப்புப் படையில் பெண்கள் ஆணையம் - மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தாக்கு

author img

By

Published : Aug 5, 2020, 9:22 PM IST

டெல்லி: ராணுவத்தில் பெண்கள் ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது என உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

SUPREME COURT mandating orders permanent commission of women in Navy Short Service Commissioned officers

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையில் பெண் அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாத இறுதியில், Short Service Commission எனப்படும் எஸ்எஸ்சியை சேர்ந்த பெண் அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையத்தை மத்திய அரசு அமைப்பதாகவும், விமானப் படை, பொறியியல், புலனாய்வு உள்ளிட்ட ராணுவத்தின் பத்து பிரிவுகளில் உள்ள பெண் அலுவலர்கள் இந்த ஆணையத்தின் கீழ் வருவார்கள் எனவும் கூறி உத்தரவிட்டது.

அதே வேளை அரசின் அறிவிப்புக்குப் பின்னர் இந்த விவகாரத்தில் எந்த முன்னகர்வும் ஏற்படவில்லை. அரசின் இந்தப் போக்கை உச்ச நீதிமன்றம் வெகுவாக சாடியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து மூன்று மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அணைத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் நடைபெறாதது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்துருசந்த், கே.எம். ஜோசப் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ள உச்ச நீதிமன்றம், உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தாமதம் நிகழ்துள்ளதாக அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதே கனவு' - துணைநிலை ஆளுநர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.