ETV Bharat / bharat

மதுபானம் விற்க அனுமதி? - உள் துறை அமைச்சகம் பதில்! - 15ஆவது நிதிக்குழு

டெல்லி: மதுபானம் விற்க அனுமதி கோரியிருந்த பஞ்சாப் மாநிலத்திற்கு உள் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Amarinder Singh
Amarinder Singh
author img

By

Published : Apr 24, 2020, 1:00 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மதுபானம் விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள் துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். கடைகள் மூலம் விற்பனை செய்ய அனுமதியளிக்க முடியாதபட்சம் வீடுகளுக்குச் சென்று மதுபானம் விற்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்திருந்தார்.

ஊரடங்கு அமல்படுத்திப்பட்ட பின் அனைத்து மாநில வருவாயும் பெருமளவு குறைந்துவிட்டது. பஞ்சாப் மாநிலம் மதுபான விற்பனை மூலம் மட்டும் மாதத்திற்கு 550 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் ஊரடங்கு காலத்தில் மதுபானம், புகையிலை, குட்கா பொருள்களின் விற்பனை முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பஞ்சாப் முதலமைச்சரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த உள் துறை அமைச்சகம், எந்த மாநிலத்திற்கும் மதுபானம் விற்பனை செய்ய அனுமதியளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அமரீந்தர் சிங் கோரிக்கை

தனது கடிதத்தில் மாநிலத்தின் வருவாய் நிலைமையைச் சுட்டிக்காட்டியுள்ள அமரீந்தர் சிங், தற்போதுள்ள நிலைமையை மீட்டெடுக்கப் பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ. 7,400 கோடி தேவை என்றும் இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக ரூ.3,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முதலமைச்சரின் 3 திட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் அமரீந்தர் சிங் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், தற்போது சந்தித்துவரும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மாநிலங்களை மீட்டெடுக்க மூன்று மாத சிறப்புப் பொருளாதார திட்டம் உள்பட மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளார்.

வரும் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வளர்ச்சி இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மாநிலங்களின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளதால் 15ஆவது நிதிக்குழு தங்கள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை அக்டோபர் 2021 வரை நீடிக்க வேண்டும் என்று பிரமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போதுதான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஏற்படவுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்த சிறந்த மதிப்பீட்டை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்றும் அமரீந்தர் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கள பணியாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது - பிரகாஷ் ஜவடேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.