ETV Bharat / bharat

மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி - 'சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்' - மூளைக்காய்ச்சல்

பாட்னா: முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பீகார் மாநில சுகாதராத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஷகில் அகமத் கான் வலியுறுத்தியுள்ளார்.

khan
author img

By

Published : Jun 21, 2019, 5:30 PM IST

பீகார் மாநிலம் முசாஃபர்பூர், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 173 பேர் உயிரிழந்தனர். அதில் 150க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்தக் காய்ச்சலால் நாளுக்குள் நாள் அதிகரித்துவரும் உயிரிழப்புகள் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செயலாளரும் பீகார் மாநில காத்வா தொகுதி எம்எல்ஏ-வுமான ஷகில் அகமது கான் மத்திய மாநில அரசுகள்தான் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன் 18 நாட்கள் கழித்தும், மாநில உள்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி சவ்பே 20 நாட்கள் கழித்தும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்தனர். இது அவர்களின் பொறுப்பில்லாத தனத்தைக் காட்டுகிறது. எனவே அவர்கள் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ராஸ்ட்ரிய ஜனதா தள தலைவர் இதுவரை பாதிக்கப்பட்ட முசாஃபர்பூரைப் பார்க்க வராததையும் சுட்டிக்காட்டி, இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முசாஃபர்பூரில் உயிரிழந்த குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.