கரோனா வைரஸைக் கையாள்வதற்கான ஆயத்த பணிகளை மதிப்பிடுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய அலுவலர்கள் கொண்ட குழுவானது நேற்று தெலங்கானா மாநில அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றது.
முன்னதாக தெலங்கானா அரசு, வைரஸ் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்வதாக கூறியும் மத்திய அரசு அலுவலர்கள் அரசு மருத்துவமைனையை சோதனையிடச் சென்றனர்.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்தர் கூறுகையில், ”வைரஸ் குறித்தான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்/ மாநிலத்தில் வைரஸ் குறித்தான எந்த வழக்குகளும் பதிவாகவில்லை. கரோனா வைரஸ் குறித்தான ஆய்வு ஒன்றையும் மாநில அரசு செய்யும்” என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்ராவில் 8 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி