மத்திய அரசு சார்பாக ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். குடிமக்களின் விவரங்களை அறிவதற்காகவும், மாநில மற்றும் நகரங்களுக்கேற்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2012ஆம் ஆண்டில் மத்திய அரசின் கணக்குபடி டெல்லியின் மக்கள்தொகை ஒரு கோடியே 90 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தலைநகரில் 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் குடியேறி வருவதால், அரசின் திட்டங்களில் சமநிலைத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதில் சாத்தியமில்லை என தெரிகிறது.
இந்தக் கணக்கெடுப்பு முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடக்கவுள்ளதாகவும், 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவே தனி செயலி வடிவமைக்கப்பட்டு, அது 16 மொழிகளில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின்போது மக்களிடம் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின் இணைப்பு, வீட்டில் உள்ள பொருள்களின் வசதி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்த 10 வருடங்களுக்கான அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைப்பு சாரா தொழில்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிவடையும்- ராகுல் காந்தி