மத்திய சிறுகுறு நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி கட்டுமான கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், சந்தையின் தற்போதைய தன்மையை வைத்து சிமென்ட் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக, சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் தேவைக்கு ஏற்ப தொழிற்சாலைகள் செயல்படவில்லை எனக் கூறிய அவர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சுமார் ரூ.111 லட்சம் கோடி மதிப்புள்ள உட்கட்டமைப்பு திட்டப்பணிகள் நாட்டில் நடைபெறவுள்ளன என்றார்.
பல சிமென்ட் மற்றும் உருக்கு நிறுவனங்கள் தொழிலாளர்களின் கூலி மற்றும் மின்கட்டணத்திற்கு அதிகப்படியான செலவுகளை செய்வதில்லை. ஆனால், இந்த தொழிற்சாலைகள் விலையேற்றத்தைத் தொடர்ந்து உயர்த்திவருகின்றன.
இதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இது தொடர்பாக நிதியமைச்சகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - பாகிஸ்தான் முன்னாள் தூதர் தகவல்