ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை பகுதியைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
பிற்பகல் ஆரம்பித்த இந்தத் துப்பாக்கிச் சூடு இன்னும் தொடர்ந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை இந்திய ராணுவப் பகுதியையும், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியையும் குறிவைத்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு தகுந்த பகிலளிக்கும் வண்ணம் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்திவருகிறது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் காயம்!