பாதுகாப்பு துறையில் அறிவித்திருக்கிற சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல் திட்டங்களை சரியான நேரத்தில், செயல்படுத்துவதை உறுதி செய்யும் என தனது மகிழ்ச்சியை முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து அவர் கூறுகையில்,"பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 விழுக்காட்டிலிருந்த 74 விழுக்காடாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
முழு அரசாங்க அணுகுமுறையையும் பின்பற்றுவதற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். ராணுவ ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்களை உள்நாட்டுமயமாக்க உதவும் அனைத்து சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் இவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இது தொழில்நுட்ப மாற்றங்களை பகிர்ந்து கொள்வதற்கும், பாதுகாப்பு வழித்தடங்கள் சரியான முறையில் பயன்படுத்துவதற்கும் வழிசெய்யும்.
சில தொழில்கள் வணிகமாக இருக்காது. அதுபோலத்தான் இந்த அந்நிய நேரடி முதலீட்டு விழுக்காட்டை அதிகரித்ததால் பாதுகாப்புத் துறையில் வணிகம் இருக்காது. மாறாக அதில், விடுதலையின் மதிப்பு பொதிந்திருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 1150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்