இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "2019-2020ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்கள், தாங்கள் வசிக்கும் நகரத்திற்குள் அல்லது வெளியே தங்கள் மையத்தை மாற்றிக் கொள்ளலாம். தியாகிகளின் குழந்தைகள், நடப்பாண்டு தேர்வை எழுத தவறினால், ஏப்ரல் 2ஆம் தேதி வரை தேர்வெழுத மற்றொரு வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அதேபோன்று எந்தவொரு குறிப்பிட்ட பாடத்திலும் ஒரு குழந்தை பின்னர் தேர்வு எழுத விரும்பினால், தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். எனவே, இந்த வசதிகளைப் பெற விரும்பும் மாணவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும்.
2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற தளர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்தது. அதேபோன்று இந்த ஆண்டும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய அனைத்து தியாகிகளின் குழந்தைகளுக்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 10, 12ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறயிருப்பது குறிப்பிடத்தக்கது.